மறுமணம்

இருவருக்கும் அனேகமாக ஒரே வயதாகத்தான் இருக்க வேண்டும். கல்லூரில் கூட ஒரே வகுப்பில் தான் படித்துவருகிறார்கள். கல்லூரி வாழ்க்கை என்பது பலருக்கு மெத்தப் பிடித்தக் கனாக் காலங்கள். பொதுத்தேர்வு இருக்கிறது என்று கூறி படிப்பைச் சுமையாக்கிய பள்ளிப்பருவத்தில் இருந்து விடுபட்டு துள்ளிக்குதித்து விளையாடும் பருவம் கல்லூரிப் பருவம். இந்தப் பருவத்தில் தான் பலருக்கும் காதல் பூ மலரச் செய்யும். தற்போது பள்ளியிலேயே மலர்ந்து விடுகிறது.

என்ன இருந்தாலும் கல்லூரி செல்லும் வயதில் உண்டாகும் காதலைத்தான் மெச்சூரிட்டியான காதலாக ஏற்க முடியும். அவ்வயதுதான்  உடல் தேவைக்கும் உணர்வுத்தேவைக்குமான வேறுபாட்டை சரியாக கற்பிக்கும்.

காதலை மட்டுமல்ல பல உன்னதமான நட்புக்களை சம்பாதித்துக் கொடுப்பதும் கல்லூரி வாழ்க்கையே.

அப்படி நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறியவர்களின் கதைதான் இது. முதலில் காதலைச் சொன்னது விமல்தான். ஜெயாவிற்கு விமல்மீதான காதல் உள்ளூர இருந்தது. ஆனால் அவள் வாய்விட்டுச் சொல்லவில்லை. கண்களால் மட்டும் சொல்லி வந்தாள் தினந்தோறும். கண்களின் பாஷை காதலர்களுத்தான் புரிகிறது.

கல்லூரி வளாகத்திற்குள் இருக்கும் புங்கைமரங்கள்,வேப்பமரங்கள் மற்றும் புளிய மரங்கள் முதலியன பேச முடிந்தால் ஆயிரமாயிரம் காதல் காட்சிகளைப் பாடி வைத்திருக்கும் மற்றொரு குறுந்தொகையாய்,குறிஞ்சிப்பாட்டாய். ஒருநாள் இருவரும் மதிய உணவை முடித்துவிட்டு வேப்ப மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஒருபக்கம் உண்ட மயக்கம் மறுபக்கம் காதல் மயக்கம். காதலென்றாலே மயக்கம் தானே.

பெ: டேய் நம்ம காதலுக்கு வீட்ல ஒத்துக்குவாங்களா?

ஆ: ஒத்துக்குராங்களோ இல்லையோ நாம சேர்ந்து வாழுறோம். ஏ மனசுல நம்பிக்கை இருக்கு ஜெயா,உனக்கு நம்பிக்க இருந்தா என்ன நம்பி வா

பெ: நம்பிக்க இல்லாம இல்லடா  ஆனா உனக்கு ஒரு நல்ல வேல வேணும். இந்த காலத்துல ரெண்டு பேருமே வேலக்கு போனத்தா குடும்பத்தச் சமாளிக்க முடியும்.

ஆ:வேல வாங்குரது கஷ்டமில்ல எப்படியாவது ஒரு நல்ல வேலயா வாங்கிடலாம் நீ அதப்பத்தியெல்லாம் கவலப்படாத

பெ:இப்போ இருக்கிற ஜனத்தொகைப்பெருக்கத்துல வேல வாங்குரது அவ்வளவு சுலமுனு நெனச்சியாடா என்றாள்.

ஆ: உ மனசுக்குள்ள நா வரப்பட்டத விடவா கஷ்டமா இருக்கப்போகுது வேல வாங்குரது

பெ: பொறுக்கி நா என்ன சொன்னா நீ என்ன  பேசிட்டு இருக்க, எப்பப் பாரு ஒரே நெனப்புதானா ?

ஆ: ஒன்னைய பொறுக்கித் தாண்டி எடுத்த

இந்தப் பொறுக்கிச்சி போடா என்று அவள் சொன்னதுதான் தாமசம் அவளது கழுத்தைச் சற்று கீழிறக்கி தனது உதட்டோடு அவளது உதட்டை சேர்த்துக் கவ்விக் கொண்டான்.
</P

மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த பறவை ஒன்று வெட்கம் கொண்டு இலையை இழுத்து மூடிக்கொண்டது.

சாலையில் வாகன இரைச்சல் கடலலையோடு போட்டி போட்டுக்கொண்டிருந்தது. இருவரும் நல்ல மதிப்பெண் பெற்று கல்லூரிப்படிப்பை முடித்து வெளிவந்தனர். வெளிவந்த சில மாதங்களிலேயே ஜெயா அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குழு 4 தேர்வில்  வெற்றி பெற்று ஒரு நல்ல  வேலையில் அமர்ந்தாள். விமல் தனியார் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்ந்தான். இருவருக்கும் காதல் இன்னும் கொஞ்சம் கூடியது. மனதிலும் உறுதி பூண்டது. இருவரின் காதல் மொழிகளையும் பரிமாற்றி பதிவு செய்து வைத்துக் கொண்டது அலைபேசி. செல்போனுக்கு பேசும் திறனிருந்தால் காதலிக்கத் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கும்.

விடுமுறை நாட்களில் இருவருமாக சினிமாவிற்கும், இன்னும் சில இடங்களுக்குச் சென்று வருவார்கள். இருவருக்கும் காதல் நன்றாகவே போய்க்கொண்டு இருந்தது. தீடீரென்று இருவர் வீட்டிலும் உதயமானது பெண்/மாப்பிள்ளை பார்க்கும் படலம்.

இருவருக்கும் வேறு இடத்தில் நிச்சமானது. திருமணமும் நடந்தேறிவிட்டது. வீட்டில் எவ்வளவோ மன்றாடிப்பார்த்தார்கள் எதுவும் பலிக்கவில்லை. அவர்களின் காதல் நினைவில் இருந்தது. திருமணக் கனவு மட்டும் தொலைவில் மறைந்தது.

ஜெயாவின் கணவனாக வந்தவன் அவளைத் தங்கம் போலத்தான் பார்த்துக் கொண்டான். வீட்டு வேலையில் ஜெயாவிற்கு உதவதோடு அவளின் மனதைப் புரிந்து சில நாட்களில் அவனே எல்லா வேலைகளையும் முடித்துவிடுவான்.  ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைக்குத் தாயானாள் ஜெயா. வாழ்க்கை சுமூகமாகப் போய்க்கொண்டிருந்து. இருந்தாலும் அவள் விமலின் காதலை மறந்து விடவில்லை.

விமலுக்கும் வீட்டாரின் கெடுபிடியால் 12 வது வரை படித்த பெண் மணமகளாக வந்தாள். இவ்வரன்   விமலின் பெற்றோரால் நேரிடையாக அமையாமல் கல்லாணத் தரகர் ஒருவரின் மூலம் அமைந்தது. திருமணமான ஒரே மாதத்தில் பெண் வீட்டார் நீதிமன்றத்தில் கணவன் அடித்துச் சித்தவதைப்படுத்துவதாகவும் தனக்கு விவாகரத்தோடு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் வழக்குத் தொடுத்தார்கள். விமலுக்கும் அவனது பெற்றோருக்கும் இது பேரிடியாக அமைந்தது. தங்கள் பக்கம் குற்றமில்லை என்பதைத் தெரியப்படுத்த விமல் வழக்காடுமன்றம் வந்தான். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது.

உண்மையைச் சொல்பவர்களும் பொய்யைச் சொல்பவர்களும் ஒரே புத்தகத்தில் தான் சத்தியம் செய்தார்கள். வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. விமலின் வழக்கறிஞர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் வாதம் நிக்காமல் தீர்ப்பு வர இருந்தது. திடீரென எழுந்த எஸ்.ஐ அதிகாரி குற்றம் விமலின் மனைவி மீதுதான் என்றார். நீதிமன்றமே சம்பித்து நின்றது. பிறகு அந்த அதிகாரி தனது வாதத்தை எடுத்து வைத்தார். விமலின் மணைவியாக வந்த பெண்ணணின் மீதும் அவளின் தந்தையார் மீதும் வழக்கு நிலுவையில் உள்ளது என்றும் இவர்கள் வசதி படைத்தவர்களின் வீட்டில் சம்பந்தம் பேசி திருமணம் செய்து கொண்டு பிறகு மானநஷ்ட வழக்குத் தொடுத்து பணம் பறந்து வந்துள்ளார்கள் என்பதையும் தெரிவித்தார். தீர்ப்பு விமலுக்குச் சாதகமானது.அவன் அந்த அதிகாரிக்கு கண்ணீர் மல்க நன்றியைத் தெரிவித்தான். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்று விமலின் தந்தை சொல்லிக் கொண்டார்.

ஒருநாள் கடைத்தெருவிற்குச் சென்றபோது விமல் ஜெயாவைப் பார்த்தான். உடனே அவளைக் கட்டிப்பிடித்து அழவேண்டும் போல இருந்தது. மனதைத் திடப்படுத்தி கொண்டு பேச முயற்சித்தான். மனதிற்கு பேரும்வலியாக அமைவது முன்னால் காதலியைப் பார்ப்பதும் அவளோடு பேசுவதும் தான்.தன் வாழ்வில் நடந்த சோகக்கதையைப் பரிந்துகொண்டான். அவளும் தனது வாழ்வைப் பற்றிப் பகிர்ந்து கொண்டாள். எவ்வளவு நேரம் பேசினார்கள் என்று தெரியாது. இளவெயிலாக இருந்த சூழல் வெயில் இல்லாத சூழலாக மாறியது. மாப் பிள்ளை போன்று சென்ற பள்ளிமாணவர்கள் அலங்கோலமாக வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

விமலை மற்றொரு திருமணம் செய்துகொள்ள ஜெயா வேண்டினாள். ஆனால் விமல் அதற்கு ஒத்துக் கொள்ள வில்லை. போனமுறை வீட்டுச் சூழலால் நாம் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இப்போது திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் அது உன்னை மட்டும் தான் என்று தெரிவித்தான். தன் மீது மாறாத காதலுடன் இருப்பதை அறிந்த ஜெயா அதற்கு ஒத்துக் கொண்டாள். அவளுக்குள்ளும் விமலின் மீதான காதல் மாறவில்லை. அதனால் தான் கணவனையும் இருபிள்ளையையும் விட்டுவிட்டு வந்து இப்போது விமலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

Post Comment