வந்த அம்மா

– துவரை பாலன்

ட்டிலில் படுத்துக்கொண்டிருந்தவனுக்கு கட்டுக்கடங்காத கோபமும் எரிச்சலும் வந்தது கடவுளின் மீது. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி நொந்து வெந்து போகவேண்டும் என்றும் என்னை ஏன் படைத்தாய் என்றும் கடவுளைத் திட்ட ஆரம்பித்தான் காசிநாதன்.

சமையல் கட்டிலிருந்த அம்மாவிற்கு இவனது சத்தம் கேட்கவே “கடவுளை ஏனடா இப்படி தினமும் கரித்துக்கொட்டுகிறாய்”  என்றவாறே கசிநாதன் அறைக்கு வந்தாள் அவன் அம்மா.  

“அந்த ஆளு என்னய ஏமா இப்படி படைச்சா”? என்று வினவினான்.

“வேகமா எழுதறப்போ சில இடத்துல தப்பு வர்ரதில்லயா அதுமாதிரி தாப்பா இதுவும்” என்று கடவுளின் செயலுக்கு நியாயம் கற்பித்தாள்.

“நா இப்படி இருக்கனேனு கவலயில்லாம அந்த ஆளுக்கு வக்காலத்து வாங்குற அதனாலதா இன்னும் சமையல் கட்டுக்குள்ளேயே நிக்கிற, ஏ முன்னாடி நிக்காத போ என்று கோபத்தைக் காட்டினான்.

காசிநாதனுக்கு வருகிற பங்குனி முடிந்தால் வயது முப்பது (30). இன்றைய பெரும்பாலான இளைஞர்களைப்போலவே வயது முப்பது ஆனாலும் திருமணமாகவில்லை. பெண் தேடிச்சென்ற இடங்களில் எல்லாம் இவனது புகைப்படத்தை மட்டுமே காண்பித்தார்கள். ஏனெனில் அவனுக்கு காலும் கையும் அவ்வளவாக இயங்காது. பிறந்தபோது ஏதும் தெரியவில்லை. நாட்பட நாட்படத்தான் அதன் அறிகுறி தெரிய ஆரம்பித்தது. எத்தனையோ மருத்துவம் பார்த்தும் பயனளிக்கவில்லை.

ஒரு கட்டத்திற்குப்பிறகு  அவன் வீட்டைவிட்டு வெளியே வருவதையே வெறுத்துவிட்டான். சன்னல்   வழியே தெரியும் மரங்களும் அதன் மீது அமரும் பறவைகளுமே அவனது பொழுதுபோக்காக மாறியது. சில நேரங்களில் பாடல் கேட்பான். ஏனெனில் தனியே இருப்பவர்களுக்குத் துக்கதை மறக்க பாடலைத்தவிர வேறு என்ன துணையாக இருக்க முடியும். அவ்வப்போது புத்தகம் வாசிப்பன், கொஞ்சம் கவிதை எழுதுவான். தன்னை விரும்பி வாசிப்பவர்களை எழுதுபவர்களாக மாற்றுவதுதானே புத்தகத்தின் வேலை.

புகைப்படத்தைப் பார்த்ததும் மாப்பிள்ளையைப் பிடித்தாகச் சொன்னவர்கள் காரணத்தைக் கேட்டதும் முடியாது என்று கூறிவிட்டார்கள். சில பெண் வீட்டார்களோ நேரில் வந்து பார்த்துவிட்டு சரிப்படாது மன்னித்துவிடுங்கள் என்று கூறிச்சென்றார்கள். மாலதி என்ற பெண் மட்டும் அவனை மணக்க முன்வந்தாள். ஆனால் அப்பெண்ணின் தகப்பானாரோ “கையும் காலும் வெளங்காதவனக்  கட்டிக்கிட்டு என்ன சொகத்தமா அனுபவிக்கப்போற” என்று அப்பெண்ணின் மனதை மாற்றிவிட்டார். இப்படித்தான் பெற்று வளர்த்தோம் என்ற உரிமையில் சில பெற்றோர்கள் தங்களது மகளின் பல விருப்பத்தைக் கொன்றுவிடுகிறார்கள். 

இச்சம்பவத்திலிருந்து எனக்கு பெண் பார்க்காதீர்கள் என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டான்.  அவனை  அம்மா  திருமணம் செய்து கொள்ளும் படி எவ்வளவோ கெஞ்சினாள்.  ஆனால் காசிநாதன் செவிமடுக்கவில்லை.

“நா போயிட்டா உன்ன கவனிக்க ஒருத்தி வேண்டாமாடா? அதுக்காகவாவது ஒருத்தியக் கட்டிக்கடா” என்றாள்.  

“கட்டிக்கிட்டு வந்து ஏங்கிட்ட அவ என்ன சொகத்த மா கண்டுருவா? எனக்கு பீ மூத்தரம் அள்ளி,குளிப்பாட்டி,சமச்சுபோட்டே நாளக் கடத்தனும்.”

“நா அவளோட பேச முடியுமே தவர வேற என்ன என்னால செய்ய முடியும். வேலைக்குப் போயி கைநெறைய சம்பளமும் பூவும்தா வாங்கித்தர முடியுமா? இல்ல நாலு எடத்துக்குத்தா அழச்சிட்டு போகடியுமா? என்னால ஒரு பொண்ணு சந்தோசம் பறிபோக வேண்டாமா. அதனாலதா சொல்ர இனிமேல் கல்யாணத்தப்பத்தி பேசவும் வேண்டாம்,பொண்ணுபாக்கவும் வேண்டாம்”

“அதுக்கு இல்லடா, அந்தந்த வயசுல அத அத அனுபவிக்கனும்டா . இந்த வயசுல ஓ ஒடம்பு என்ன கேக்கும்னு தெரியுமா? அதுக்கு ஒரு நிவாரணம் வேண்டாமாடா?”

“நீ சொல்ரது புரியுதுமா, சில நேரத்துல சொல்லமுடியாத அளவுக்கு ஆச வரும், ஏ உன்னையே கூப்டலாமானு கூடத் தோனும், ஆனா நம்ம ஒடம்பு இருக்க நெலமைல அதெல்லாம் முடியாதுனு தெரிஞ்சதால அந்த எண்ணத்த முடிஞ்சவர அடக்க ஆரம்பிச்சிட்ட.”

காசிநாதனின் பேச்சைக்கேட்ட அவனது தாய் கோபமும் படவில்லை,ஆனந்தமும் கொள்ளவில்லை,மாறாக வருத்தமே கொண்டாள்.

மகன் இப்படி ஆனதிலிருந்து குடிக்க ஆரம்பித்த சீனிவாசன் இன்னும் மகா குடிகாரனாக மாறினாரே ஒழிய குடியை நிறுத்தவில்லை. இப்பொழுதெல்லாம் குடித்தால் எங்கே விடமுடிகிறது. இரவு 180 மி.லி குடித்தால் கூட காலையில் தலைவலி வந்துவிடுகிறது. அதைப்போக்க மேலும் குடிக்கவே மனதைத் தூண்டுகிறது. அந்த அளவுக்கு மதுவில் இரசாயனம் சேர்க்கப்படுகிறது. மீண்டும் அவர்களை மதுவைத்  தொடவே செய்கிறது. இது வியாபார நோக்கமாவும் இருக்காலாம். இந்தச் சிக்கலில் தான் சீனிவாசனும் சிக்கியிருக்க வேண்டும். சாப்பட்டிற்குக் கூட வீட்டிற்கு வருவதில்லை. இரவு உறங்க மட்டும் வந்து செல்வார்.

குடிகாரப் புருசன் ஒருபக்கம், உடல்பாதிக்கப்பட்ட மகன் ஒருபக்கம். இருவருக்கும் இடையே போராடினாள் அம்மா. ஊராரும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்கள் மகனுக்கு வைத்தியம் பார்க்கும்படி ஆனால் சீனிவாசன் இதைக் காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. இப்போது கூட எங்காவது டாஸ்மாக் கடைவாசலில் நின்றுகொண்டு வாய்ச்சவடால் பேசிக்கொண்டிருக்கலாம்.

ஒருநாள் இரவு மோகத்தீயும், காமத்தீயும் உடலைப் பற்ற அதன் வெம்மை தாங்காமல் கட்டிலில் படுத்தவாறே சுயமைதுனம் செய்ய ஆரம்பித்தான், அதைச்செய்யக்கூட அவனது கை ஒத்துழைக்கவில்லை.

உணவு எடுத்துவந்த அம்மா இதனைக்கவனித்தாள். அவன் திடீரெனத் துப்பட்டியை இழுத்து உடலை மூடினான். அருகே சென்று அமர்ந்த அம்மா உணவை அவனுக்கு ஊட்டியவாறே பெண்ணின் ஸ்பரிசத்தையும், இன்பதையும் ஊட்டினாள்.

இரவு மெல்ல வெளுக்க ஆரம்பித்தது.

nboobalan314@gmail.com

1 comment

comments user
ராஜா பாண்டிச்சேரி

கதை.. படிக்க.. மனம் ஏற்றுக்கொள்ள முடியாத படி சுழல்கிறது.. ஆனால், சூழல்.. எந்த நிலைக்கும் மனிதர்களை கூட்டிச்செல்கிறது..‌ எங்கோ ஓரிடத்தில் ஏதோ ஒன்று இப்படியும் நடந்து கொண்டிருக்குமோ.. என்றே தோன்றுகிறது.. வித்யாசமான கதை.. படிக்க நன்றாக உள்ளது..

Post Comment