ஆசைகள்

ஆசைதான்

வானத்தில் பறக்க அல்ல

பிறரின் வலைகளில் சிக்காமலிருக்க.

புன்னகை முகத்தைக் காட்ட

உண்மை கோவத்தை எதிர்கொள்ள.

ஏற்ற இறக்கமில்லா

வாழ்க்கையை வாழ.

ஒரு நாளாவது

சமமான உரிமைகளைப் பெற.

ஆளுமையற்ற உலகில் வாழ.

என் கவிகளை புத்தகங்கள் பேச.

ஆசைதான் – எல்லாம் ஆசைதான்

நிறைவேறாத, நிறைவு ஏறாத

ஆசைதான்.

– தி. ஹேமலதா

Post Comment