முனைவர் மு. ரமேஷ் கவிதைகள்
புவிமுழுவதும் சரிந்துக் கிடக்கும் இருளில் சுடர்ந்து உருகுகிறது மெழுகுவர்த்தி அறியதொரு விடியலில் உருகுவதற்காக பெருமலையென இறுகி கிடக்கிறது இமயம் என்னும் பனி துலி. போகும் வரும் எமது பாதையிலும் தஞ்சுடரென வீற்றிருக்கிறது புத்தனின் கண்களில் ஒன்று.
திமிங்கலத்தை ஒத்த மலைகளையும் மலைகளை ஒத்த திமிங்களங்களையும் தன்னுள் அடக்கி சலனமற்று வீற்றிருக்கிறது மைய்யக் கடல் பேரிறைச்சலோடு குதித்தாடுகின்றன ஏதுமற்ற கரையோரத்து அலைகள் அனைத்தையும் கண்ணுற்றபடி தான் எதுவென்று தெரியாமல் மணளுள் புதைகிறது எமது தோட்டத்திலிருந்து தவரிய இலை.
இலக்கினை சுமந்தபடி மனம் எதையோ பார்த்தபடி கண்கள் அப்படி இப்படி நடந்தபடி கால்கள் எல்லாருடைய கால்களுக்கடியிலும் காலவடிவில் பூமி நழுநழுவிக் கொண்டுதான் இருக்கிறது.
அடர் பொழுதின் கருப்பந்தோட்டத்து நறியென நடு இரவு ஆழ்கடலில் தவரி விழுந்த விமானத்தின் ஆரஞ்சு பெட்டியென நினைவுகள் என் காதில் விழுவதற்கும் விழாமல் இருப்பதற்கும் அலரிக்கொண்டிருக்கிறது வெட்டவெளியில் திரிந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கித் தினரும் சிறிய காற்றின் வெதும்பலை தாங்கிக் கொள்ளமுடியவில்லை கடக்கும் சாலையில் திடீரென தோன்றி மறையும் நண்பர்களுடைய நினைவின் பின்னால் வாலில்லா நாயென தலையாட்டி சிறிக்கையில் என் கால் மேல உட்காருப்பா என்கிறான் எனது அன்பிற்கினிய மூத்த மகன் அம்சிறையன். தன்னை விழுங்கும் வேட்கையில் செந்நா ஏந்தி பேருரு எய்தும் தீப் பிலம்புக்கு முன்னால் சும்மா இருக்கிறது இரவு வெளிச்சம் என்பது பொய் என்கிறான் முதலாமவன் எந்த தீயாலும் ஒன்றும் செய்ய முடியாது என்கிறான் இரண்டாமவன் இருளே நிரந்தரமானது என்கிறான் மூன்றாமவன் எல்லாமும் எமக்கு தெரியும்படி சுடர்ந்து காட்டுகிறான் புத்தன்.
பட்டணம் சேராத பட்டிக்காட்டில் நடுசாமத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவனின் காதுகளுக்குள் விழுகிறது அது பக்கத்தூர் திருமணப் பாடலை போல வீனைகள் மடிவதற்கு காரணமாக இருந்திருப்பேனோ மூதாதையரின் ஆவியா அலைவது பிடித்த பாடலின் ஓசையை போல காதுகளுக்குள் இரங்குகிறது அது இரவுகளில் தோன்றும் கணவுகளை போல புரிந்தும் புதிராக இருந்தமையால் காதுகளை மூடினேன் மனாளகளவை போல கைகளில் வீரித்து இருந்தது கொசு.
கைதவரிய மைக் கரைசலென பாய்ந்து பரவுகிறது இரவு கூடுத் திரும்பும் பறவைகளாக அனைவரும் திரும்பிக் கொண்டிருக்கின்றனர் ஊடல் தீர்ந்த வாயிலாக அவரவர் வீட்டு முன் கதவுகள் திரந்து மூடுகின்றன வரவேற்பரை, சமையலரை, கழிப்பரை, படுக்கையரை தொலைக்காட்சியரை எல்லாமும் அதன் அதன் இருப்புகளை தெரிவித்து கொண்டிருக்கின்றன ஓசைகளாக வாசனைகளாக வண்ணங்களாக கணவுமூட்டைகளை தரையில் விரித்து அவற்றின் மேல் தங்களை படுத்துகின்றனர் சிலர் வினைத் திட்பம் நிறைந்தவர் நீ எமது மவுனம் உமது பேச்சுக்களால் நிறைந்த்து எமது கையாளாகாத்த் தனத்தையும் உமது வலிமையையும் காத்து கிடக்கும் மவுனம் உணர்த்த கூடும் கையற்றுபோகும் ஒருநாளில் கைகொடுப்போம் என்பதை.
பசித்துக் காத்திருக்கும் மண்ணுக்குள் என் உடல் சாயவேண்டும் ஆடு, மாடு, கோழியருத்து பித்தென்றுவீசுவார்களே என்னுடைய அதுவும் அந்த மண்ணின் வாயில் இனித்திருக்கவேண்டும். பொம்மைக்காக அல்லாமல் அதிலிருக்கும் சாக்லெட்டுக்காக எந்தக் குழந்தையும் வாங்குவதில்லை கிம்டர்ஜாயிக்குள் ருக்கும் சாக்லெட்டளவிற்கு என்னிடம் அந்பிருக்கிறது தொண்டைக்கடியில் ஒட்டிக்கிடக்கும் இளஞ்சலியில் வீற்றிருக்கும் இனிப்பை போல சிறுத்திருக்கிறது பொம்மை வியாபாரிகள் அறிந்து செய்கிறார்கள்.
பாம்பு மிகவும் கொடியது பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் பாம்பு சட்டையைக் கழற்றும் என்றபோது யாருடைய சட்டையை அப்பா எனக் கேட்கிறான் என்மூத்தமகன் அம்சிறையன். சுழித்தோடியத் தடங்களுடன் வரண்டுக் கிடக்கும் நதியைபோல விரிந்துக் கிடக்கின்றன உள்ளங்கைகள் இமைகளில் தொக்கிநிற்கும் திரல்திரலான மேகத் திவலைகள் விசும்பக் காத்திருக்கின்றன தண்ணீர் தண்ணீரென அலரியபடி புதிதாக கட்டப்பட்ட பாத்தரூமுக்கள்ளிருந்து வெளியேறிய தேவதை தொடைமட்டும் துணியை தூக்கிக் கொண்டு சற்றே கால்களை அகட்டி சிறுநீர் கழிக்கிறாள் அந்த தேவதையின் காலுக்கடியில் அப்போது மலர்ந்த ஆகாய தாமறை வெந்து தனிவதை கண்ணுற்றனர் அங்கேயே உண்டு உரங்கும் நடைபாதைவாசிகள்.
பரித்தியாகப் பிறந்திருந்தாலாவது அக்குளையோ, காலிடுக்கையோ மறைத்து யாருடைய மானத்தையாவது காத்திருக்கலாம் பந்தையக் குதிரையைபோல ஓடும்நாட்களை என்ன செய்வது பட்டாம்பூச்சியைபோல சிறகடிக்க ஆசைதான்.
கொலகொலையா முந்திரிக்கா, நெரைய நெரைய சுத்திவா, கொல்லையடிச்சவன் எங்கிருக்கான் கூட்டமாயிருக்கான் அள்ளிபோடு.
உனது வெடித்த நெஞ்சியின் சிதிலம் குத்தப்படாத என் காத்துள் தாவியிரங்குகிறது உனது கோபம், வேகம் அவசரம் இவையாவற்றையும் விட எனது பொருமை மிகச் சிறியது கடக்கமுடியாத ஆகாயம் என இருப்புக் குறித்த உனது முனுமுனுப்பை நான் எப்போதும் கண்டுகொள்வதில்லை.
நிலம்: தோண்டும் உன்னை நான் தாங்கவில்லையென்றால் தோண்டுவதற்கு நீருக்கமாட்டாய்.
அன்புடையீர் வணக்கம்: அன்புடையீர்வணக்கம் எல்லா உயிர்களின்மீது கொள்ளும் அன்பைத்தான் உன்மீதும் செலுத்துகிறேன் ஆனாலும் என்ன மானாவாரிக் கொள்ளையில் துவரஞ்செடியையும் சோலத்தட்டையும் கட்டியனைத்து அவரைக் கொடி
Post Comment