தெரிந்த நாற்காலி

அந்த நாற்காலிக்காரர்
மிகவும் கோபமானவர்

யாரையும் அவர்
விளிக்க மாட்டார்
ஆனால் அவரை
எல்லோரும் விளிக்கவேண்டும்

விளிக்காதவர் எவராயினும்
நாற்காலி துரோகியாவார்கள்
நன்மைகள் எதும் கிடைக்காது
பின்குறிப்பு
விளித்தாலும் கிடைக்காது

எல்லோரும் அவரின்
விருப்பக்காரர்களாக இருக்கவேண்டும்
எல்லோரும் அவரை
புகழ்ந்துப் பேசவேண்டும்

கொஞ்சம் உண்மையை
சொல்லிக்கொள்ளலாம்
அதுவும் எல்லோர்க்கும்
தெரிந்ததை மட்டும்

அப்போதுதான்
மற்றவற்றை நம்புவார்கள்
உண்மையென்று

மற்றபடி
நானும் கூட
அவரையே விரும்புகிறேன்
எனக்கும் தெரிந்த
நாற்காலி என்பதால்

@
வெற்றிநிலவன்.பெ

Post Comment