மீட்பரின் சாவி

– தேனி முத்து பிரசாத்
மண்ணை அள்ளி மார்பில் பூசி
விண்ணை கொண்டு விதை முளைத்து
வேருக்கு அடியில் பாத்தி கட்டி
விளையும் பயிர்க்கோ ஒவ்வொரு விலைகள்
விளைத்த எங்களுக்கோ வெறும் வயிறுகள்
கொள்முதல் நிலையங்களில் ஒரு விலை
கொள்ளைகாரனிடத்தில் ஒரு விலை
எங்கும் இல்லை
எங்கள் உழைப்புகான விலை
எங்கள் பசிக்கான விலை
உரம் ஒரு விலை
அதை இட ஒரு விலை
களை எடுக்க ஒரு விலை
கதிர் அறுக்க ஒரு விலை
அதை ஏற்ற(வண்டியில்) ஒரு விலை
கொண்டு செல்ல ஒரு விலை
விற்க ஒரு விலை
லஞ்சம் மற்றொரு விலை
இத்தனை விலை
அதில் எத்தனை விலை
எங்கள் விலை
எங்கள் உழைப்பின் விலை
எங்கள் பசியின் விலை
உழுபவனுக்கும் உண்பவனுக்குமான உறவு
இடையே நுழைந்து கெடுத்தது
இந்த தரகு
முறிந்தது எங்கள் சிறகு
அடைப்பட்டிருக்கிறோம் கம்பியில்லா கூண்டில்
நம்பிக்கையில்
மீட்பரின் சாவி கண்ணில் தெரிகிறது என்று…..
Post Comment