செல்வி.பா.தாயாரம்மாள் கவிதைகள்

கவிதை 1

பிரம்மாவின் கனவுச் சிதறலால்
இவர்கள்
உயிருள்ள உருவங்கள்

செயலற்ற பதுமைகள்

கவிதை 2


சில்லறைகளை சேர்க்க முயன்றன
சிறிய கைகள்
சுருண்டு விழுந்தது
உருவம் எழுந்து பார்த்தபோது
சில்லறைகள்
சென்ற இடம் தெரியவில்லை
இது
உத்தமர்கள் உலவும் இடம்
சிறிய உருவம்
சோர்ந்து வீழ்ந்தது.

கவிதை 3


கள்ளிப்பாலும்
நெல்மணியும்
கண்ணே உனக்கு
காணிக்கையா?
பூவா பூத்திருந்தா
நீ சாமிகிட்ட போயிருப்ப
நீ பொண்ணா பொறந்ததால
பூமிக்குள்ள போயிட்டியா
பொண்ணும் பூமியும் ஒன்னுன்னு
என்னோட அம்மா சொன்னா
அப்ப எனக்கு
புரியலையே
நீ மண்ணுக்குள்ள போனதும்தா
மகளே எனக்கு புரிஞ்சதுமா
வஞ்சக மனுஷங்க
உன்னோட வாழ்வ
முடிச்சிட்டாங்க மகளே
உன்ன பொதச்ச இடம் தெரியலையே
என்னோட பொன் மகளே
நீ தூங்கு கண்ணே

செல்வி.பா.தாயாரம்மாள்

மேனாள் பேராசிரியர்

அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி

வாலாஜா

2 comments

comments user
Baskar S

பேராசிரியர் தாயாரம்மா அவர்களின் கவிதை கட்டுரை மிகவும் அருமை கல்லி பாலும் நெல் மணியும் ஒவ்வொரு வரிகளும் அருமை.

comments user
Baskar S

பேராசிரியர் தாயாரம்மா அவர்களின் கவிதை கட்டுரை மிகவும் அருமை கள்ளி பாலும் நெல் மணியும் ஒவ்வொரு வரிகளும் அருமை.

Post Comment