காணிக்கை

  • நிகழ்பாரதி

ஒரு விநாயகர் சதுர்த்தி நாளன்று
எருக்கம் பூக்களை விற்று
தலை நிறைய
மல்லிப்பூக்களை சூடியிருந்த அக்கா
திடீரென ஒரு நடுராத்திரியில்
உத்தரத்தில் தூக்கிட்டு மாண்டாள்

தரைமட்டமாகிவிட்ட கூரை வீட்டின்
அந்தரத்தில் தொங்கியபடி கேட்கும்
அழுகையைத் தேற்றும் பொருட்டு
நீலமேறிய அக்காளுக்கு காணிக்கையாய்

புட்டமுரசி மார்பிடித்த ஆண்டையின்
ஆண்குறியை அறுத்து
ஊர் மந்தையில் உதிரம் தெளித்தோம்.

Post Comment