நகரும் வீடு –
முனைவர் மு ரமேஷ்
ஆங்கிலத்தில் பிரேம்
கவிஞர் வீட்டுக்காரி
வீட்டைக் கட்டிப்பாரு

கல்யாணத்தைப் பண்ணி பாரு
என்பதன் அர்த்தம்
கட்டிக் கொண்டோருக்கு
புரிந்து இருக்கலாம்
வீட்டுக்காரன் வீட்டுக்காரி
இச்சொல்லின் சுவை
மனதில் பட்டு முகத்தில்
மலர்கையில் தெரிகிறது
ஆனால் ஒன்று மட்டும் உண்மை
சொந்த வீடு வைத்திருப்போர் எல்லாம்
அந்த வீட்டில் வசிப்பதில்லை
எல்லோரும் ஆண்டு காண்டு
வீட்டுக்கு வீடு மாறிக் கொண்டே இருக்கிறார்கள்
அதனால்தான் நகரும் வீடு ஒன்றில்
நான் வசிக்கிறேன்
நான் இருக்கும் வீடு
நகர்ந்து கொண்டே இருப்பதினால்
நகரும் வீடு ஆகிறது
ஆயிரம் ஆயிரம் ஆசை ஆணைகள்
முன்ன இழுக்க
துயரக் கொம்பு முளைத்த
காலக்குதிரைகள் பின்னின்று தள்ள
தம்ம சக்கரத்தின் ஆரக்கால்கள்
மேலும் கீழும் அசைய
நிதமும் நகர்ந்து கொண்டே இருக்கிறது
நான் இருக்கும் வீடு
ஒருவேளை நான் வெளியேறுகையில்
வீடும் வெளியாகலாம்..
The Moving House
Poet’s wife,
‘Build a house, Get married and see’
experience can understand the real meaning
Man of house, lady of house
taste of these words
will blossoms on the face while touch the heart
But one truth remains
Not everyone who owns a house
Actually lives in it.
Everyone, year after year,
Keeps moving from house to house.
That is why
I live in a moving house.
The house I live in Keeps moving
And so, it becomes a moving house.
Thousands of desires pull forward,
While sorrow-laden horses
Push from behind.
The legs of the Dhamma wheel
Move up and down,
And every day It continues to move.
Perhaps When I leave the house behind
My house may turn into space….
Post Comment